ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

நண்பி

0 comments

கூடுகள் கூடுதல்
காதலன்று
கூட நேர்ந்தும்
காத்தல் நன்று!!

 கண்களைக் கண்கள்
மென்று தின்று
கண்ணியம் காப்பதே
காதலின் கன்று!!

தனிமையிலும் நீ
தள்ளியே நின்று
தாமரைச் சிரிப்பை
அவிழ்த்தாய் அன்று!!

 காதல் காமம்
அனைத்தையும் கொன்று
நட்பினால் நெருங்கினாய்
மனதை வென்று!!


-குமரன்
 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates