திங்கள், 26 செப்டம்பர், 2011

தீபாவளி

0 comments
தூண்டுபவர் தூண்ட
துயில் துறந்து
இருள் துரத்தும் சுடரே.. -நீ

ஒளி அருளி
களி பெருகச் செய்வாயென்பதே
அவர் இலக்கு(ஓ)?..

தூண்டுகிறாரே எம்மை
தீண்டுகிறாரே என
களிப்புற்று நீ
கரை கடந்து-பிறர்
கலங்கஞ் செய்தல் ஆகுமோ?..

பொறிபற்றி
திரிசுற்றி
சுடராயெரி
மகிழ்ச்சி..

கட்டற்று
காற்று கலந்து
காடழித்தாலும் கவலை
வீடழித்தாலும் கவலையே..

ஒளி அருளினால்
வணங்கும் -நீ
ஒழிக்க விழைந்தால்
சுணங்கும்..

அகலில் ஒளித்தால்
அல் அழகாகும் -நீ
கொந்தளித்தால்
இல் இரண்டாகும்..

ஆவளியில் காணவே
ஆவலுண்டு
அழகுமுண்டு-உன்னை
அருகி ஆசி பெற
அடங்கியிரு
அமைதியாயுமிரு...
-குமரன்
.

வியாழன், 22 செப்டம்பர், 2011

நான்குமி ரண்டு மொன்றாகுமோ..??

0 comments

சுவரோ கம்பமோ
நீயுமா?
முச்சந்தியிலோ மூத்திரச்சந்திலோ
நீயுமா?
ஒருமையுடனோ பன்மையுடனோ
நீயுமா?
முறையாகவோ புறம்பாகவோ
நீயுமா?
எச்சரிக்கையுடனோ எக்கேடாகவோ
நீயுமா?
உரிமையோடோ ஊராரோடோ
நீயுமா?
தாழ் போட்டே செல்வர் கழிப்பறையில்கூட..
காட்டியலைய காட்டிலா அலைகிறோம்??
 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates