திங்கள், 2 ஆகஸ்ட், 2010

காக்க காக்கபள்ளி பயின்ற காலத்தில் ஏதோவொரு போத்தலில் குடிநீர் கொண்டுச்செல்வேன். நண்பர்களில் பெரும்பாலான மாணவிகள் மட்டும் அழகழகான வரைபடங்கள் உள்ள நீர்ப்புட்டியைக் கொண்டுவருவர். அப்போது அது ஆபத்தைக் கொண்டுவருவனவா என்று எவரும் ஆராய்ந்ததில்லை. ஒருமுறை பாத்திரம் கழுவும் சவர்க்கார கலனில் (AXION) ஒரு மாணவனோ மாணவியோ உணவு எடுத்துவந்தபோது ஆசிரியர் அறிவுரை சொன்னது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. NESCAFE போத்தலில் வேலைக்கு கறி எடுத்துபோன என் அப்பாவும் அம்மாவும் எந்த பாதிப்பையும் அடையவில்லை.


அதைப்பற்றி யோசிக்கக்கூட இல்லை. ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் ‘மினரல்’ தண்ணீர் போத்தலைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தினால் உடல்நலத்துக்குக் கேடு என அறிந்து அதன் பயன்பாட்டை முற்றாகத் தவிர்த்தேன்.


அப்போது அதற்குப் பதிலாக அந்த வேளையில் அதிகம் விளம்பரப்படுத்த, புகழாரம் சூட்டப்பட்ட பாலிகார்பனேட் (POLYCARBONATE) போத்தலை எனக்கொன்றும் துணைவிக்கொன்றும் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினோம். அப்போது அதுதான் சிறந்ததாக விளங்கியது. இன்று அதற்கும் கேடு வந்துவிட்டது. அண்மையில் நான் படித்த அந்த அதிமுக்கிய செய்தியை இங்கு அப்படியே ஒட்டியிருக்கிறேன். இச்செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் பரப்பினால் புண்ணியம் கிட்டும். செய்தி வழங்கிய WIKIPEDIA, கீற்று, மற்றும் READER'S DIGEST க்குக் கோடான கோடி நன்றிகள்.


’பிச்பநோல் எ (BISPHENOL A) என்பது வேதிப்பொருள்ஆகும் அல்லது (BPA). இந்த வேதிப்பொருளைக் கொண்டு கடினமான பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்களும், மழலையர்களுக்கான பீடிங் பாட்டில்களும் தயாரிக்கப்படுகின்றன.

மனித உடலில் மிகுதியாகச் சேரும் BPA இரத்தக்குழாய் சம்பந்தமான நோய்களையும் நீரிழிவு நோயையும் ஏற்படுத்தவல்லது. இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்களை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு பயன்படுத்துவோரின் சிறுநீரில் BPA ன் அளவு 69 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது தொடர்பான ஆய்வுகளை Harvard School of Public Health (HSPH) ஐச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர். பாலிகார்பனேட் பாட்டில்களை மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையான பாட்டில்களுக்கு மறுசுழற்சி எண் 7 தரப்பட்டுள்ளது. மேலும் இந்த BPA நஞ்சு பல்மருத்துவத்தில் பயன்படும் கூட்டுப்பொருள்களிலும், உணவையும் பானங்களையும் அடைக்கப் பயன்படும் அலுமினியக் குப்பிகளின் உட்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.


பிச்பநோல் நஞ்சு உடலில் சேருவதால் பாலுணர்வு மழுங்குதல், பால்சுரப்பிகளில் மாற்றங்கள், விந்து உற்பத்திகுறைதல் ஆகிய குறைபாடுகள் தோன்றுகின்றன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குளிர்ந்த பாட்டில்களை பயன்படுத்துவதைவிட சூடான பாட்டில்களை பயன்படுத்தும்போது விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கின்றன. HSPH ஐச்சேர்ந்த ஜென்னி கார்வில் என்னும் ஆராய்ச்சி மாணவர் ஏப்ரல் 2008ல் 77 மாணவர்களை இதுசம்பந்தமான ஆய்விற்கு உட்படுத்தினார். இந்த மாணவர்களுக்கு ஏழுநாட்களுக்கு எவர்சில்வர் பாத்திரத்தில் குடிப்பதற்கான பானங்கள் வழங்கப்பட்டன. அவர்களின் சிறுநீரில் BPA ன் அளவும் சோதிக்கப்பட்டது. அடுத்த ஒரு வாரத்திற்கு அவர்களுக்கு இரண்டு பாலிகார்பனேட் பாட்டில்களில் பானங்கள் கொடுக்கப்பட்டன. ஆய்விற்கு உட்பட்டவர்களின் சிறுநீரை மீண்டும் சோதித்தபோது BPAன் அளவு 69 சதவீதம் அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டது.


2008 ஆம் ஆண்டு கனடாவில் குழந்தைகளுக்கான பாலிகார்பனேட் பாட்டில்களில் BPA பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுவிட்டது. சில உற்பத்தியாளர்கள் தாமாகவே முன்வந்து பாலிகார்பனேட் பாட்டில்களில் BPA ன் பயன்பாட்டை முற்றிலும் நீக்கிவிட்டனர். இந்த ஆய்வு இன்னும் தொடரப்படவேண்டும் என்றும் BPA ன் தாக்கத்தால் ஏற்படும் மார்பக புற்றுநோய், இனப்பெருக்கக் குறைபாடு இவற்றை ஆராயவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.’

கீழுள்ளவை BPA வேதிப்பொருள் கலக்காதது.கற்றது ஒழுகு...

3 comments:

மு.மதிவாணன் / M.MATHIVANAN சொன்னது…

வணக்கம். ஐயா.

நல்ல புதிய செய்தி. நன்றி.

திலகுமரன் சொன்னது…

நன்றி ஐயா

Tamilvanan சொன்னது…

ந‌ல்ல‌ விள‌க்க‌ங்க‌ள். ந‌ன்றி.

கருத்துரையிடுக

 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates