புதன், 21 மார்ச், 2012

நான் கிறுக்கன்

கிறுக்கன் கிறுக்குவான் - அதை
கிறுக்கல்களெனக் கொண்டாடுவர்..

சந்தங்களுடன் சில நிறுத்தற் குறிகள் - அது
கிறுக்கப் பட்டவை மட்டுமே..

யாவர்க்கும் வரும் யாப்பு- அதை
யாசித்த பின்னர் வருவதே சிறப்பு..

 எறிந்த இடமெல்லாம் கரியாகும்-அஃது
எரியப்பட்ட இடமெல்லாம் கவியாகாது..

அறியாதவன் அளித்தல் அரிதாவது நலம்
அறிந்தவர்போல் அள்ளித் தெளித்தல் மலம்..

 -குமரன்

0 comments:

கருத்துரையிடுக

 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates